பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. சேரன் இயக்கத்தில் உருவாகும் ‘அய்யா’ படத்தின் தலைப்பை வெளியிட்டு ராமதாஸிற்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
