Friday, May 16, 2025

படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்- ராமதாஸ் பேட்டி

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் இன்று காலை 10 மணிக்கு பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பலரும் புறக்கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 108 மாவட்டங்களில் தலைவர், செயலாளர் என 216 பேரில் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். முக்கியமாக அன்புமணி ராமதாஸ் இதில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது : பாமகவில் கோஷ்டி மோதல் இல்லை. சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது. கூட்டத்தில் பங்கேற்க செயல் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நிர்வாகிகள் சிலர் களைப்படைந்ததால் வரமுடியாமல் போயிருக்கலாம்.

படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் வெற்றி பெறுவது எப்படி என்பதை பரிமாறிக்கொள்ளவே இந்த கூட்டம் என அவர் கூறியுள்ளார்.

Latest news