ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் மார் 550 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. கடலில் இருந்து 17 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், சோதனை ஓட்டம் முடிந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார். அதோடு ராமேஸ்வரம் – தாம்பரம் இடையிலான ரயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார்.