Friday, December 26, 2025

போலி விவசாயிகள் நடத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி : விவசாய கூட்டமைப்பினர் போராட்டம்

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதி கோவைக்கு வருகை தர உள்ளார். பிரதமர் மோடியின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட3 பெண்கள் உட்பட 83 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, பிரதமர் மோடியை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய விவசாயிகள் கூறியதாவது,

மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்க ரூ.500 கோடி ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு, இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க தார்மீக உரிமை இல்லை.

மரபணு மாற்றப்பட்ட விதைகளை அனுமதிக்க கூடாது.

நதி நீர் இணைப்பில் ஒன்றிய அரசு பாராபட்சமாக நடந்து கொண்டிருக்கிறது.

10 ஆண்டுகளாக தென்னக நதிகளை இணைக்க ஒன்றிய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை.

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு 2 மடங்கு விலை கொடுப்போம் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் நெல் டன் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் உயர்த்துவது பதிலாக, வெறும்‌ ரூ. 3 மட்டுமே உயர்த்தியுள்ளார்.

இயற்கை விவசாயத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில்லை.

போலி விவசாயிகள் நடத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்”

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related News

Latest News