Wednesday, May 7, 2025

‘பிஎம் கிசான்’ திட்டம்- 2000 பணம் கிடைக்காது! உடனே இதை பண்ணுங்க!

பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த 2000 ரூபாய் தவணை உங்களுக்கு வராமல் போக வாய்ப்பிருக்கிறது.ஏன் தெரியுமா? இதை உடனே செய்யாமலிருப்பீர்கள் என்றால் அந்த பணம் உங்கள் வங்கிக்கணக்கில் வராமல் மிஸ் ஆகும்!

மத்திய அரசு நடைமுறைப்படுத்திய பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம், நமது நாட்டின் சிறு மற்றும் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித் தொகையாக தருகிறது. இதை மூன்று தவணைகளாக, ஒவ்வொன்றுக்கும் 2000 ரூபாய் என நிதி வழங்கப்படுகிறது.

இப்போது வரை 19 தவணைகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. அடுத்து 20வது தவணை வர ஜூன் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சில முக்கியமான அப்டேட்களை நீங்கள் செய்யாமல் இருந்தால், இந்த 2000 ரூபாய் தாமதம் ஆகலாம்… அல்லது நமக்கே வராமல் போகலாம்!

முதல் முக்கிய விஷயம் – e-KYC. இப்போது இது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இதை பிஎம் கிசான் ஆன்லைன் போர்ட்டல் வாயிலாக அல்லது அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தில், பயோமெட்ரிக் மூலம் செய்யலாம். இன்னும் நீங்கள் செய்யவில்லை என்றால், உடனே இதை செய்து முடிக்கவும்.

இரண்டாவது விஷயம் – உங்கள் சொந்த நிலம் இருக்க வேண்டும். நில பதிவுகள் சரியாக இருக்க வேண்டும். மேலும் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களில் ஏதாவது தவறு இருந்தால், நீங்கள் இந்த திட்டத்தின் நன்மையைப் பெற முடியாது.

மூன்றாவது – உங்கள் வங்கி கணக்கு மற்றும் ஆதார் இணைப்பும் மிக முக்கியம். இரண்டு இடத்திலும் பெயர் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் அனுப்ப முடியாது.

மற்றொரு முக்கியமான விஷயம் – விண்ணப்பத்தில் நீங்கள் கொடுத்துள்ள பெயர், கணக்கு எண், IFSC குறியீடு, முகவரி எல்லாம் சரியாக இருக்க வேண்டும். ஒரு எழுத்துப்பிழை இருந்தாலுமே, அந்த தவணைத் தொகை மிஸ் ஆகிவிடும்.

எனவே, இந்த பணம் நமக்கு உரியவையாகச் சரியாக வந்து சேர, இப்போது சொன்ன அப்டேட்களை உடனே செய்து முடிங்க!

Latest news