Saturday, February 7, 2026

தொழில்நுட்ப கோளாறுகளை சந்திக்கும் விமானங்கள்., ஏர் இந்தியாவுக்கு முதலிடம்

2024 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு தணிக்கையில், ஆய்வு செய்யப்பட்ட விமானங்களில் சுமார் 50% விமானங்கள் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.

இந்த பட்டியலில் ஏர் இந்தியா நிறுவன விமானங்கள் முதலிடத்தில் உள்ளது. இக்குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் அதிக கோளாறுகள் பதிவாகி உள்ளது. ஏர் இந்தியாவைத் தொடர்ந்து, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்த சூழலில், குறைபாடுகள் உள்ள விமானங்களை முழுமையாக சரிசெய்ய வேண்டும் அல்லது அவற்றை இயக்குவதை நிறுத்த வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

Latest News