அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லம் முன்பிருந்த வாகன நிறுத்துமிடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. கீழே விழுந்த சிறுது நேரத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதில் பத்துக்கும் மேற்பட்ட கார்கள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த 5 பேரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயனைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.