தமிழகத்தின் பல பகுதிகளில், சிலர் வீட்டு வாசலில் அல்லது compound wall அருகில் பிங்க் கலர் தண்ணீர் நிரப்பிய பிளாஸ்டிக் பாட்டில்களை வைக்கிறார்கள். இதனால் தெரு நாய்கள் அப்பகுதிக்குள் வராது என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இதற்கான எந்தவொரு விஞ்ஞான ஆதாரமும் இல்லை என்று விலங்கியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், நாய்கள் மனிதர்களைப் போல நிறங்களை முழுமையாக உணர முடியாது. அவை சிவப்பு, பிங்க் போன்ற நிறங்களை தெளிவாகக் காணாது. மாறாக, நீலம் மற்றும் மஞ்சள் போன்ற நிறங்களை மட்டுமே சற்று வேறுபடுத்திக் காணும் திறன் கொண்டவை. இதனால் பிங்க் நிறம் கொண்ட தண்ணீர் பாட்டில்களை பார்த்து பயப்படுவது அல்லது விலகுவது சாத்தியமில்லை.
அதே நேரத்தில், சில நாய்கள் பாட்டிலில் பிரதிபலிக்கும் ஒளி, தங்களின் பிரதிபலிப்பு போன்றவற்றை பார்த்து குழப்பமடைந்து அங்கிருந்து விலகலாம். இதுவே சிலர் பாட்டில் நாய்களை விரட்டும் என்று நம்புவதற்குக் காரணமாகியுள்ளது.
நிபுணர்கள் கூறுவதாவது, இது ஒரு அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கை மட்டுமே. நாய்களை அடித்து விரட்டுவது அல்லது அவற்றைத் துன்புறுத்துவது தவறு. அவை தொந்தரவு அளித்தால், மனிதாபிமான அமைப்புகள் அல்லது நகராட்சி மன்றத்தின் உதவியை பெறுவது தான் சரியான வழி என்று வலியுறுத்துகின்றனர்.
