Sunday, December 28, 2025

திடீரென வெடித்த சரக்கு வாகனத்தின் டயர்., தூக்கி வீசப்பட்ட தொழிலாளர்கள்

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் சாலையில் சென்ற பிக்கப் வாகனத்தில் திடீரென டயர் வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் வலதுபுறமாகச் சாய்ந்து கவிழ்ந்தது.

வாகனத்தின் பின்புறத்தில் மூன்று தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். வாகனம் கவிழ்ந்ததும், மூவரும் கீழே தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மடிகேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related News

Latest News