அறிவியில் இல்லாத இடமே இல்லை. நாம் செய்கிற ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் அறிவியல் இருக்கிறது. குறிப்பாக, இயற்பியல் இருக்கிறது. வெறுமனே பார்த்தால் அது என்ன? என்று கேட்பீர்கள். ஆனால், ஒரு பொருளை நகர்த்துவதற்கும், ஒரு பொருளை தூக்குவதற்கும் பின்னணியில் இருக்கும் இயற்பியலை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிவியலாளர்கள் கண்டுபிடித்து சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். அதற்கு இப்போது என்ன? என கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது.
அறிவியலின் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால், மிக கடினமாக இருக்கும் வேலைகளை மிகமிக எளிதாக செய்ய முடியும் அல்லது நீங்கள் தேடிச் செல்லும் பொருள் கூட எளிதாக உங்களிடத்தில் வந்து சேரும். அப்படியான அறிவியல் விதிகள் மனிதர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என நாம் எண்ணிக்கொள்ளக்கூடாது. பள்ளிக்கூடம் சென்று படிக்காத பறவைகளுக்கு கூட அந்த விதி தெரியும். அந்தவகையில் பிஸிக்ஸ் PHYSICS தெரிந்த குருவி ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது.
அதாவது தாகத்துடன் இருக்கும் குருவி, தண்ணீர் தேடி அலைகிறது. அப்போது வாட்டர் பாட்டிலில் தண்ணீர் இருப்பதை அறிந்த அந்தக் குருவி, அருகில் இருக்கும் கற்களை தூக்கிப் போட்டு, வாட்டர் பாட்டிலில் தண்ணீரை மேலே வரவைத்து அழகாக தண்ணீரை குடித்து தாகத்தை தணித்துக் கொள்கிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், பிஸிக்ஸ் தெரிந்த குருவி என கமெண்ட் அடித்து வருகின்றனர்.