அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டைன் கடந்த சில நாட்களாக தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று த.வெ.க தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பின்னர் அவருக்கு கட்சி பதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் கரட்டூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அலுவலகம் முன்பு வைத்திருந்த பிளக்ஸ் போர்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இருப்பது போன்ற பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
