Wednesday, October 8, 2025

உயரப் போகும் PF பென்சன் தொகை..! எவ்வளவு தெரியமா..?

நாட்டில் மாத சம்பளத்திற்கு பணி புரியும் ஒவ்வொரு பணியாளரிடமும் மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பி.எப். தொகை பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தொகையில் இருந்து ஓய்வுபெறுபவர்களுக்கு பிஎஃப் பென்ஷன் வழங்கப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பென்ஷன் தொகை ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் 11 ஆண்டுகளாக பென்ஷன் தொகையில் எந்தவிதமான உயர்வும் செய்யப்படவில்லை. இந்நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தற்போது இந்த பென்ஷன் தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

பி.எப். தொடர்பான அனைத்து முக்கிய தீர்வுகளையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் உச்சகட்ட மத்திய அறங்காவலர் குழு (CBT) மேற்கொள்கிறது. அக்டோபர் 10 மற்றும் 11 தேதி நடைபெறவுள்ள இந்த குழு கூட்டத்தில் பண வீக்கத்தின் அடிப்படையில் பி.எஃப் பென்ஷன் தொகையை உயர்த்துவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்குள் ரூ.1,000 ஆக இருந்த பென்ஷன் தொகையை ரூ.2,500 வரை உயர்த்த வாய்ப்பு உள்ளது.

தற்போது உள்ள பொருளாதார சூழ்நிலையை மற்றும் பண வீக்கத்தையும் கருத்தில் கொண்டு, பணியாளர் சங்கங்கள் பென்ஷனை ரூ.7,500 வரை உயர்த்தக்கோரி வலியுருத்தி உள்ளன. ஆனால் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் இதை அனைத்து அடிப்படைகளிலும் கணக்கிட்டு, 7.5 மடங்கு உயர்வு செய்ய முடியாது என தெரிவித்தது. இருப்பினும், ரூ.2,500 வரை உயர்த்துவதில் வாய்ப்பு உள்ளது என்பதையும் தெரிவித்து வருகிறது. இந்த முடிவை லட்சக்கணக்கான பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News