Friday, March 14, 2025

பெட்ரோல், டீசல் விலை உயர்வா ! கவலை வேண்டாம் மாற்று திட்டம்

மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை உயர்வை சமாளிக்க முடியாமல் குதிரையை வாங்கியுள்ளார் முதியவர் ஒருவர், தினமும் அதன் மூலம் வேலைக்கு சென்று வருகிறார். அவுரங்காபாத்தை சேர்ந்த சாயிக் யூசூப், கல்லூரி ஒன்றில் லேப் அசிஸ்டென்ட் ஆக வேலை பார்த்து வருகிறார்.

வீட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். பெட்ரோல் விலை உயர்வால் சம்பளத்தில் முக்கால் வாசி பெட்ரோலூக்கே  செலவனாதல்  பெரும் சிரமத்திற்கு ஆளான யூசூப் 40 ஆயிரம் ரூபாய்க்கு குதிரையை வாங்கி, தினமும் அதில் வேலைக்கு சென்று வருகிறார். முதியவரின் இந்த செயல் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Latest news