நடுவானில் “மாரடைப்பு” விமானத்தில் திக்..திக்.. நிமிடங்கள்

63
Advertisement

சாலை , ஆகியம்  அல்லது கடல் வழி  போக்குவரத்து ஆகட்டும் பயணிகளுக்கு சம்பந்தப்பட்ட வாகனமோ,கப்பலோ,அல்லது விமானத்திலோ நம்மை பாதுகாப்பாக அழைத்து செல்லும் ஓட்டுனர்கள் மற்றும் அதன்  பணிக்குழு கடவுளுக்கு சமமாக பார்க்கப்படுகிறார்கள்.

காரணம்…  பயணத்தில் பயணிகளுக்கு  எதிர்பாராதவிதம் ஏற்படும் பிரச்சனைகளை துரிதமாக செயல்பட்டு எதிர்கொண்டு பாதுகாத்து கொண்டுபோய் விடுவது தான்.விமானத்தில் இது போன்ற தருணங்கள் அரிதே.இருப்பினும் அதுபோன்ற பயணிகளின்  ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்து விமனாக்குழு செயல்படுவது வழக்கம்.

தற்போது இதே போல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது, கேரளா மாநிலம்  கண்ணுரிலிருந்து துபாய் சென்ற “கோ ஃபர்ஸ்ட்” (Go First flight) விமானத்தில் யூனுஸ் ராயன்ரோத் என்ற நபர் பயணித்துள்ளார்.விமானம் நடுநாவின் பறந்துகொண்டு  இருந்தபோது , யூனிஸ்க்கு மாரடைப்பு ஏற்பதாக விமான நிறுவனம் தெரிவித்தது.

Advertisement

மேலும்,பயணியின் நிலை அறிந்த அருகே இருந்த மற்ற பயணிகள் உதவி கேட்டு கூச்சலிட்டதாகவும்,உடனடியாக விமானத்தில்  இருந்த விமான பணி குழு சென்று  பரிசோதித்ததில் அவருக்கு இதயத்துடிப்போ மூச்சோ இல்லை,பின் சற்றும் தாமதிக்காமல் அவரை உணவு பொருட்கள் உள்ள அறைக்கு கொண்டுவந்து அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டது.

நல்லவேளையாக    விமானத்தில் மருத்துவர் ஒருவர் பயணித்துக்கொண்டு இருந்தார்.பின் அந்த மருத்துவரின் உதவியுடன் யூனிஸ் அவர்களுக்கு இதயத்துடிப்பை கொண்டுவர சிகிச்சை அளிக்கப்பட்டது.சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அவருக்கு இதய துடிப்பு வந்ததாகவும் அதனை தொடர்ந்து,அந்த நபர் சுயநினைவுக்கு வந்துவிட்டார்.பின்பு ஆக்ஸிஜன் உதவியுடன் கண்காணிப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதை தொடர்ந்து துபாய் வந்தடைந்த பின் விமானத்திலிருந்து சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார் என தெரிவித்துள்ளது விமான நிறுவனம். 

கடினமான நேரத்தில்,விமானத்தில் சக பயணிகளையும் கவனித்து சூழலை துரிதமாக கையாண்ட விமான பணிக்குழுவிற்கு ரொக்க வெகுமதி வழங்குவது ஆகவும் அதேவேளையில், பயணியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் மற்றும் அந்த பயணியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் மற்றும் அந்த பயணத்தில் இருந்த அணைத்து பயணிகளும் உள்நாடு அல்லது வெளிநாட்டுக்கு தங்கள் விமானத்தில் இலவசமாக  பயணம் செய்துகொள்ள இலவச டிக்கெட்டை வழங்கியுள்ளது விமான நிறுவனம்