Tuesday, January 28, 2025

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை புரட்டி எடுத்த மக்கள்

காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே விளையாடிக்கொண்டிருந்த இந்திராநகர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு, புளியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அதனை வீடியோவாகவும் செல்போனில் பதிவு செய்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், மூர்த்தியை பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Latest news