சென்னை தியாகராய நகரில் (தி. நகர்) உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் நேற்று முதல் திடீரென மூடப்பட்டதால் ஷாப்பிங் செய்ய வந்த மக்கள் பார்க்கிங் செய்யமுடியாமல் அவதியடைந்தனர்.
40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த MLCP-யை ஒரு தனியார் நிறுவனம் நடத்தி வந்தது. அவர்களின் ஒப்பந்தம் முடிந்ததால் பார்க்கிங் மூடப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாயினர்.
இந்த MLCP-யில் 222 கார்கள் மற்றும் 513 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும். மூன்று கார் லிஃப்ட் மற்றும் ஒரு பைக் லிஃப்ட் உள்ளது. பைக்குகள் அடித்தளத்திலும், மொட்டை மாடியிலும் நிறுத்தப்படுகின்றன. கார்கள் ஆறு தளங்களில் நிறுத்தப்படுகின்றன.