Monday, December 23, 2024

வேலூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் பீதி

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த செர்ல்லபல்லி கிராமம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு 15 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது விவசாய நிலத்திலேயே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரவு நிலத்தில் நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் சென்று பார்த்தபோது, சிறுத்தை ஒன்று நாய்களை துரத்துக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே வீட்டுக்குள் பதுங்கிக்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நிலத்திலேயே சுற்றித்திரிந்த சிறுத்தை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

இதுகுறித்து, நிலத்தின் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பேரணாம்பட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், வனத்துறையினர் சிறுத்தை வந்த நிலங்களுக்கு சென்று ஆய்வுசெய்து, அதன் கால் தடையங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

சிறுத்தை நடமாட்டத்தால், பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் பீதியிலும் பயத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.

Latest news