பொய் வழக்கு போட்டதாக கூறி போலீசாருடன் மக்கள் வாக்குவாதம்

தூத்துக்குடியில் பொய் வழக்கு போட்டதாக கூறி போலீசாருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமுதாநகர் பகுதியில் கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை தாக்கியது தொடர்பாக கண்ணன் என்பவர் மீது தென்பாகம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து, உறவினர்கள், காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாக கூறி காவல் நிலையம் மற்றும் மருத்துவமனையை முற்றுகையிட்டு போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் அங்கிருந்த கண்ணனின் உறவினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய கண்ணன் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாக கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் இரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related News

Latest News