தற்போது இருக்கும் நவீன உலகில் பாஸ்போர்ட் பற்றி தெரியாதவர்கள் கிடையாது..
பாஸ்போர்ட் என்பது, ஒரு நாட்டு குடிமகன் மற்றொரு நாட்டிற்கு பயணம் செய்ய செல்லக்கூடிய ஆவணமாகும். இது ஒரு நபரின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான சான்றாக செயல்படுகிறது.இந்தியாவின் பாஸ்போர்ட் முறையை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கியப் படியாக, வெளியுறவு அமைச்சகம் பாஸ்போர்ட் சேவா திட்டத்தின் பதிப்பு 2.0-வின் கீழ் சிப் அடிப்படையிலான இ-பாஸ்போர்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது இந்திய அரசாங்கம் இந்த முயற்சியை சிறிது காலமாக திட்டமிட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல், அதிகாரப்பூர்வமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களுக்குள், அதாவது 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏப்ரல் 2024ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிப் அடிப்படையிலான e-passport-கள், தற்போது பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0 வின் கீழ் பல்வேறு நகரங்களில் கிடைக்கின்றன.
அதாவது, சென்னை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், நாக்பூர், அமிர்தசரஸ், கோவா, ராய்ப்பூர், சூரத், ராஞ்சி, புவனேஸ்வர், ஜம்மு மற்றும் சிம்லா போன்ற நகரங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களில் இ-பாஸ்போர்ட்டுகள் கிடைக்கின்றன. இந்த சேவை விரைவில் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களிலும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பமானது அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, மெக்சிகோ, கனடா, ஜப்பான் என 120க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது . இந்த நடவடிக்கை எதற்கு என்று தெரியுமா?
அதாவது இந்த நடவடிக்கையானது மோசடியைத் தடுக்கிறது மற்றும் இந்தியர்களுக்கான விரைவான குடியேற்ற செயல்முறைகளை விரைவாக முடிக்கப்படுவதற்கு எடுக்கப்படும் ஒரு நடவடிக்கையாகும். பல நகரங்களில் 2024ஆண்டில் பாஸ்போர்ட்களை மேம்படுத்தும் பணி தொடங்கியது.