ரயிலைப் பயணிகள் தள்ளிச்சென்ற வீடியோ
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பான வீடியோ ஒன்று ட்டுவிட்டரில்
பதிவிடப்பட்டுள்ளது.
பரபரப்பான அந்த வீடியோவில் உத்தரப்பிரதேச
மாநிலம், சஹாரன்பூரிலிருந்து டெல்லி செல்லும்
பயணிகள் ரயில் ஒன்று மீரட் அருகிலுள்ள தௌராலா
ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தது.
அப்போது திடீரென்று பயணிகள் பெட்டியில் தீப்பிடித்து
எஞ்சின் பகுதிக்கும் பரவத் தொடங்கியது.
அதனைக் கண்ட ரயில்வே ஊழியர்கள், விரைந்து
செயல்பட்டு ரயில் பெட்டிகளைப் பிரித்துத் தீப்பற்றிய
பகுதிகளைப் பிரித்து மற்ற பகுதிகளுக்கும் பரவாத
வண்ணம் செயல்பட்டனர். மற்ற பெட்டிகளைப் பயணிகள்
உதவியுடன் இழுத்துச்சென்றனர்.
இதனால், தீ கட்டுப்படுத்தப்பட்டது. பெரிய அளவில்
பாதிப்பும் ஏற்படவில்லை.
பயணிகளின் ஒத்துழைப்புக்கு வலைத்தளங்களில் பாராட்டு
குவிந்தது. அதேசமயம், ரயில் பெட்டியைப் பயணிகள்
இழுத்துச்செல்லும் காட்சி இணையதளவாசிகளுக்கு
வேடிக்கையாகவும் அமைந்தது.