ராணிப்பேட்டையில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை மழைநீரில் இறங்கி தள்ளும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து வேலூரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. ரத்தினகிரி அருகே சர்வீஸ் சாலையில் சென்ற போது, மழைநீரில் சிக்கி பேருந்து பழுதானது.
இதனையடுத்து மழைநீரில் இறங்கி பேருந்தை தள்ளும் நிலைக்கு பயணிகள் தள்ளப்பட்டனர். பின்னர் பயணிகள் மாற்று பேருந்து மூலம் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
