பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் நவம்பர் 23-ஆம் தேதி சென்னையில் 49 புகா் மின்சார ரயில்கள் ரத்துச் செய்யப்படவுள்ளன.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை – அரக்கோணம் இடையேவுள்ள திருநின்றவூா் நிலையப் பணிமனையில் வரும் நவம்பர் 23- ஆம் தேதி காலை 7 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், அந்த நேரங்களில் அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 49 புகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.
சிறப்பு ரயில்கள்
அதேநேரம், பயணிகளின் வசதிக்காக நவம்பர் 23-ம் தேதி காலை 6.30 மணி முதல் 11 மணி வரை சென்ட்ரலிலிருந்து அரக்கோணம், திருத்தணி, ஆவடி இடையே 17 பயணிகள் சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படவுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
