ரயில் பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில் பல நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.. அதேபோல பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரீல்ஸ் வீடியோக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஓடும் ரயிலில் நபர் ஒருவர் பக்கெட்டில் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து கப்பில் எடுத்து தன்னுடைய தலையில் அள்ளி அள்ளி ஊற்றி குளிக்க ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமல்ல, கையோடு கொண்டு வந்திருந்த சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்கிறார். இந்த குளியல் காட்சியை அவரே வீடுயோ எடுத்து, சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்.
அந்த நபர் பிரமோத் ஸ்ரீவாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதற்காகவும், பொதுப் போக்குவரத்தில் தகாத நடத்தையில் ஈடுபட்டதற்காகவும் ஸ்ரீவாஸ் மீது ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
சோஷியல் மீடியாவில் திடீரென ஃபேமஸ் ஆகவேண்டும் என்பதற்காகவே இப்படி குளிக்கும் வீடியோ எடுத்து போட்டதாக அந்த நபர் கூறியுள்ளார்.
