பாட்னாவில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமான நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
மென்பொருள் பொறியாளரான நந்தன் குமார் , இண்டிகோவுக்கு அனுப்பிய ட்விட்டர் பதிவில் , உங்கள் சிஸ்டேமில் தொழில்நுட்ப பாதிப்பு இருப்பதாகக் கூறி தனது ஹேக்கிங் விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
நந்தன் குமார், மார்ச் 27 அன்று பாட்னாவிலிருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் 6E-185 இல் பயணம் செய்து உள்ளார் , தவறுதலாக மற்றொரு பயணி பெட்டியுடன் நந்தன் குமாரின் பேட்டி மாறியுள்ளது.
எங்கள் பெட்டியில் சாவி உடனான பூட்டு இருக்காது. இதனால் வித்யாசமாக இருந்த அந்த பெட்டியை வீட்டிற்கு சென்ற போது தான் கவனித்தோம். உடனே உங்கள் வாடிக்கையாளர் சேவைக்கு அழைத்தேன் என்று நந்தன் குமார் ட்வீட் செய்துள்ளார்.
மேலும் , பல அழைப்புகளுக்குப் பிறகு, தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பை மேற்கோள் காட்டி தன் பெட்டி உள்ள நபரின் தொடர்பு விவரங்களை வழங்க வாடிக்கையாளர் பராமரிப்பு குழு தயாராக இல்லை என்று அவர் கூறினார்.
ஒருகட்டத்தில் இதுகுறித்து மீண்டும் அழைப்பதாக உறுதியளித்ததாகவும் , ஆனால் அந்த அழைப்பு வரவில்லை. இரவு கடந்து விடியற்காலைக்குப் பிறகு, குமார் விஷயத்தை தன் கையில் எடுக்க முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
லக்கேஜில் உள்ள பயணிகளின் பிஎன்ஆர் எண்ணைப் பயன்படுத்தி விமான நிறுவன இணையதளத்தில் அந்த நபரின் விபரம் அறிய பலமுறை முயன்றும் தோல்வியடைந்ததால், மென்பொருள் பொறியாளரான நந்தன் விமான நிறுவனத்தின் இணையத்தளத்தையே ஹேக் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி தன் கணினி மூலம் இண்டிகோ இணையதளத்தை ஹேக் செய்து , பயணிகளின் முழு விவரங்களை எடுத்து ,அதன் மூலம் தவறுதலாக கைமாறிய தன் பெட்டியை வைத்துள்ள நபரின் தொடர்பு விவரங்களை எடுத்துள்ளார் நந்தன் ,பின்பு அந்த நபரை தொடர்புகொண்டு 6 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் அவரிடமிருந்து தன் பெட்டியை கைமாற்றியுள்ளார் நந்தன்.
முன்பாக , இதுகுறித்து பலமுறை விமான நிருணவத்தை தொடர்பு கொண்டதாகவும் , அவர்கள் மீண்டும் அழைப்பதாக உறுதி அளித்தும் கூட எந்த அழைப்பும் வரவில்லை என நந்தன் குற்றச்சாட்டினார்.இதையடுத்தே , விமான நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்ததாக தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த இண்டிகோ செய்தித் தொடர்பாளர் கூறுகையில் , “நாங்கள் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் .மேலும் எங்கள் தகவல் தொழில்நுட்ப செயல்முறைகள் முற்றிலும் வலுவானவை என்பதையும். எங்கள் கொள்கையின் படி , ஒரு பயணியின் விவரங்களை மற்ற பயணிகளுடன் பகிர்ந்துகொள்ள முடியாது. தன்னை தான் எங்கள் வாடிக்கையாளர் பராமரிப்பு குழு பின்பற்றியது.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை , நந்தன் குமார் கேட்ருந்த நபரை தொடப்புக்கொள்ள வாடிக்கையாளர் பராமரிப்பு குழுவால் முயற்சிகள் மேற்கொண்டன , ஆனால் அழைப்புகளுக்கு பதிலளிக்கப்படாததால் தகவலை பரிமாறமுடியவில்லை என தெரிவித்தார் .