அரசு பேருந்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பயணி : போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருச்சிக்கு பல்வேறு அரசு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை ஒரு மணி அளவில் பழனியில் இருந்து அரசு பேருந்து திருச்சியை நோக்கி புறப்பட்டது.

அதில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேருந்தில் ஏறி கடைசி இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது அந்த நபர், தனது வேஷ்டியால் பேருந்தின் கம்பியில் தூக்கு போட்டு தொங்கி உள்ளார். இதைக் கண்ட பயணிகள் மற்றும் நடத்துனர் ஓட்டுனர் ரெட்டியார்சத்திரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர் யார் ?எந்த பகுதியைச் சேர்ந்தவர்? எதற்காக உயிரிழந்தார்? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து சென்று கொண்டிருந்த பொழுது பேருந்தில் பயணி தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Related News

Latest News