‘டேஸ்ட் அட்லஸ்’ என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் உலகின் 50 சிறந்த சாலையோர உணவுகளின் பட்டியலை வெளியிட்டது.
இந்த பட்டியலில் தமிழ்நாட்டின் பிரபல உணவான பரோட்டா 5ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
முன்னதாக ‘டேஸ்ட் அட்லஸ்’ வெளியிட்ட உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலில் பரோட்டா 6ம் இடம் பிடித்திருந்த நிலையில் தற்போது 5 இடத்திற்கு முன்னேறியுள்ளது.