சென்னை மாநகராட்சியில் தற்போது 10 இடங்களில் மட்டும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் வசூலிக்கும் 10 இடங்கள்
- மெரினா கடற்கரை சர்வீஸ் ரோடு.
- ராயப்பேட்டை பஜார்.
- அண்ணா நகர் 2-வது அவென்யூ.
- என்.எஸ்.சி. போஸ் ரோடு.
- பெசண்ட் நகர் 6-வது அவென்யூ.
- நுங்கம்பாக்கம் காதர் நவாஸ்கான் ரோடு.
- புரசைவாக்கம் நெடுஞ்சாலை.
- தி.நகர் ஜி.என்.செட்டி ரோடு.
- மைலாப்பூர் தெப்பக்குளம்.
- சேத்துப்பட்டு மெக்கானிக்ஸ் ரோடு.
இந்த 10 இடங்களில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணியை தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழக (TEXCO) நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கு இருசக்கர வாகனத்திற்கு ரூ.5, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.20 பேருந்து மற்றும் வேன்களுக்கு ரூ.60 என கட்டணம் வசூல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் வழியாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.