சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி திரைப்படம், வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், படம் வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
‛பராசக்தி’ திரைப்படத்துக்கு சென்சார் சான்று கிடைக்காததால் படம் வெளியாவதில் சிக்கல் எழுந்த நிலையில், தற்போது, ‘பராசக்தி’ படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திட்டமிட்டபடி ‘பராசக்தி’ திரைப்படம் நாளை வெளியாகிறது.
