Wednesday, February 5, 2025

பேப்பர் கப்களில் டீ, காபி குடிப்பது உடலுக்கு நல்லதா??

அடுத்தவர்கள் எச்சில் பட்ட டம்ளரில் சாப்பிடுவதை விட பேப்பர் கப்பில் டீ, காபி குடிப்பது ஆரோக்கியமானது என பலரும் நினைக்கின்றனர். உண்மையில் பேப்பர் கப்பில் டீ, காபி குடிப்பது நல்லதா என இப்பதிவில் பார்ப்போம்.

பேப்பர் என்பது நுண்துளைகளால் உருவாக்கப்பட்டது. இதில் சூடாக டீ, காபி போன்ற திரவங்களை ஊற்றும்போது அப்படியே வெளியே வந்துவிடும். பேப்பர் கப்களில் 15 நிமிடத்திற்கு மேலே சூடான திரவம் இருந்தால், எண்ணற்ற நுண் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் திரவத்தில் கலந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

இதனை தொடர்ந்து குடிக்கும் போது கேன்சர் போன்ற உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடிய நோய்கள் வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. எனவே, பேப்பர் கப்பில் தண்ணீர், ஜூஸ் குடிப்பது பிரச்னையில்லை. ஆனால், சூடான பொருட்களைத் தவிர்ப்பது நல்லதாகும். 

Latest news