Saturday, July 12, 2025

தாம்பரம் TO ராமேஸ்வரம் : பாம்பன் விரைவு ரயிலின் அட்டவணை வெளியீடு

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தை வருகிற 6 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறாா். இந்நிலையில் தாம்பரம் – ராமேசுவரம் இடையே புதிதாக இயக்கப்படவுள்ள பாம்பன் விரைவு ரயில் சேவைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தாம்பரத்தில் இருந்து நாள்தோறும் மாலை 6.05 மணிக்கு புறப்படும் பாம்பன் விரைவு ரயில் (16103), விழுப்புரம், சிதம்பரம், திருவாரூர், பட்டுக்கோட்டை, பரமக்குடி வழியாக மறுநாள் காலை 5.45 மணியளவில் ராமேசுவரம் சென்றடையும். ராமேசுவரத்தில் இருந்து நாள்தோறும் மாலை 3.35 மணிக்கு புறப்படும் மற்றொரு ரயில் (16104) மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

ஏற்கெனவே, சென்னை – ராமேசுவரம் இடையே இரண்டு தினசரி ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இது மூன்றாவது ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news