Sunday, May 4, 2025

இந்தியாவுக்கு பாகிஸ்தான் பூச்சாண்டி! ‘நாங்கள் இதை கண்டிப்பாக செய்யப்போகிறோம்!’ 3ஆக பிரிந்த பாக். ராணுவம்!

பாகிஸ்தான் வரும் வாரத்தில் ஏவுகணை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து உச்சம் அடைந்து இரு நாட்டு உறவிலும் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானியர்களுக்கு இந்திய விசாக்களை நிறுத்தி வைப்பு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதோடு எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்த உள்ளதாக  ANI செய்தி தெரிவிக்கிறது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஏப்ரல் 23 அன்று இரவு பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தபோவதாக அறிவித்திருந்தாலும், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதன்பின் ஏப்ரல் 26-27 தேதிகளில் கராச்சி கடற்கரையில் பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் சோதனை நடத்துவதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இருப்பினும், அந்த அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாக மட்டுமே இருந்தன. இந்த இரண்டு முயற்சிகளுக்குப் பிறகு, ஏப்ரல் 30 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் சோதனை நடத்துவதற்கு பாகிஸ்தான் மூன்றாவது முயற்சியை மேற்கொண்டது, ஆனால் மீண்டும் அப்படி எந்த சோதனையும் நடத்தப்படவில்லை.

ஜம்மு காஷ்மீரில் எல்லையில் மாறி மாறி தொடர்ந்து துப்பாக்கிச் சூடு, பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் வன்மமான பேச்சு என்ற இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த நான்காவது ஏவுகணை சோதனை திட்டம் இரு நாட்டுக்கிடையேயான பதற்றத்தை அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது.

இந்நிலையில் Balochistan, Durand Line மற்றும் இந்திய எல்லை என எல்லா பகுதிகளும் தற்போது சர்ச்சைக்குரியவைகளாக இருப்பதால் பாகிஸ்தான் ராணுவம் 3ஆக சிதறி இருக்கிறது. இந்த சூழலில் போர் என்று வைத்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் அதை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு பலமானதாக இல்லை என்பதே உண்மை.

Latest news