Friday, June 13, 2025

பாகிஸ்தானின் சூழ்ச்சி! ரஷ்யாவை கைக்குள் போட ‘வேஷம்’! இந்தியாவுக்கு எச்சரிக்கை!

இந்தியாவுடனான கடுமையான மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது அடுத்த நடவடிக்கையை எடுத்துவிட்டது. அதாவது, நம் நெருக்கமான நட்பு நாடான ரஷ்யாவை அணுகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எழுதிய கடிதத்தை, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவிடம் தனது பிரதிநிதி குழு மூலம் வழங்கியுள்ளார்.

இந்த கடிதம் தற்போது புடின் கைக்கு சென்றுள்ள நிலையில், நம் நாடு இது தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காரணம், பாகிஸ்தானுடனான சமீபத்திய மோதலில் நம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள், விமானப்படை மற்றும் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. அதனால் பெரும் இழப்பை சந்தித்த பாகிஸ்தான், வெளிநாடுகளிடம் நம்மை பற்றி பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றது.

இதற்குத் தகராறாக, நம்முடைய எம்பிக்கள் தலைமையில் 7 குழுக்கள் 32 வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு ரஷ்யாவைச் சென்று, நம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாகிஸ்தான் பரப்பும் தவறான தகவல்களை விளக்குகின்றனர்.

அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு உதவியாளர் சையத் தாரிக் பதாமி தலைமையிலான குழுவும் ரஷ்யாவை சென்றடைந்து, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து, பாகிஸ்தான் எதிர்கொண்ட இழப்புகள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து தனது பார்வையை எடுத்துரைத்துள்ளது. மேலும், ரஷ்யாவுடன் எரிசக்தி, போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட பிரிவுகளில் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, ரஷ்யாவுடனான மூலோபாய நட்பை வலுப்படுத்த விரும்புவதாகவும், அதற்கான முதலெழுத்து இந்த கடிதமே என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதே சமயத்தில், நம் பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் தளவாடங்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவை ரஷ்யாவிலிருந்து வருகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அதனால், ரஷ்யா–பாகிஸ்தான் நட்பு வலுப்படுவது நம் நாட்டுக்கு எதிரான சிக்கலாக மாறக்கூடும் என எக்ஸ்பர்ட்டுகள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், இந்தியா இப்போதே ரஷ்யாவுடன் தன் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news