கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது.
இந்நிலையில் நேற்று இரவு குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்திய எல்லை பகுதிக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.
எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியும் அவர் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றதால் துப்பாக்கியால் சுடப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.