‘பாகிஸ்தானே இல்லாமல் போய்விடும்!’ நடுங்கவிட்ட ஆப்கானிஸ்தான்! பதறும் ஷெபாஸ் அரசு?

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இரு நாடுகளும் மோதல் நிலைக்கு சென்றுள்ளன. இதையடுத்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி, பாகிஸ்தானை கடுமையாக எச்சரித்துள்ளார்.

‘பாகிஸ்தான் தனது தவறுகளுக்காக பெரிய விலை செலுத்த வேண்டிய நேரம் வரும். இந்நிலை தொடர்ந்தால், பாகிஸ்தானே நிலைத்து நிற்காது,’ என அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீப மாதங்களாக இரு நாடுகளுக்கிடையே எல்லை மோதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் எல்லை பகுதியில் தாலிபான் ஆதரவுடன் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்று குற்றஞ்சாட்டுகிறது. இதற்கு ஆப்கானிஸ்தான் நேரடியாக சம்பந்தமில்லை என்றும், இது பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சனை என்றும் ஆப்கான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

‘பாகிஸ்தான் தாலிபான்’ எனப்படும் அமைப்பே பாகிஸ்தானின் உள்ளகப் பாதுகாப்பை சிதைக்கிறது என்று அந்நாட்டு அரசு குற்றம்சாட்டி வருகிறது. அந்த அமைப்பை ஒழிக்காமல் அமைதி சாத்தியமில்லை என்றே பாகிஸ்தான் வலியுறுத்துகிறது. இதற்கு எதிராக ஆப்கானிஸ்தான், தாங்கள் எந்தவித ஆதரவையும் வழங்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், துருக்கி உள்ளிட்ட சில நாடுகள் சமரசம் செய்தாலும், அமைதி பேச்சுவார்த்தை முடிவின்றி நீடிக்கிறது. இதன் விளைவாக இருநாடுகளும் மீண்டும் எதிர்மறை நிலைப்பாட்டில் உள்ளன. சிராஜுதீன் ஹக்கானியின் கூற்று, ஆப்கான்–பகிஸ்தான் உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளதால், பிராந்திய அமைதிக்கும் இது புதிய சவாலாக மாறியுள்ளது.

Related News

Latest News