Saturday, May 17, 2025

ஏமாந்து போன பாகிஸ்தான்! இந்தியா வச்ச ‘twist’!

இந்தியா–பாகிஸ்தான் உறவில் தொடர்ந்து பாய்ந்துக்கொண்டிருக்கும் பதற்றம் இப்போது அமைதியான நிலையில் …  அந்த மோதலில் இந்தியா கையாண்ட ஒரு ரகசிய தந்திரம், இப்போது வெளியே வந்து எல்லாரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரை இந்திய விமானப்படை வைத்திருந்தது. இதில் பயன்படுத்தப்பட்டிருந்தது – உண்மையான போர் விமானங்களைப் போலவே தோற்றமளிக்கும் போலி டிரோன்கள்!

இந்தியாவின் சுகோய்-30, மிக்-29 போர் விமானங்களைப்போலவே பாகிஸ்தானின் ரேடார் கண்களில் தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த டிரோன்கள், பாகிஸ்தான் வான் பாதுகாப்பை கலங்கடித்து விட்டன.

இதன் விளைவாக, பாகிஸ்தான் தங்கள் சீன தயாரிப்பான HQ-9 ஏவுகணை அமைப்புகளை இயங்கச் செய்தது. ஆனால், இது தான் இந்தியாவின் திட்டமிட்ட சிக்கல். பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட தொடங்கியதும், இந்தியா இஸ்ரேலிய தயாரிப்பான ஹாரோப் தற்கொலை டிரோன்களை அனுப்பி, அந்த ரேடார் மற்றும் ஏவுகணை நிலையங்களை நேரடியாக அழித்தது.

அதற்குப் பிறகு, இந்தியா தனது வலிமையான பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவி விட்டு , பாகிஸ்தானின் முக்கியமான 11 விமான தளங்களைத் துல்லியமாக தாக்கியது. நூர் கான், போலாரி, சர்கோதா உள்ளிட்ட ராணுவ விமான தளங்கள் சீரும் சிதறியதாக கூறப்படுகிறது.

இதற்குப் பின்னால்தான் ஒரு உண்மை வெளிவந்தது… பாகிஸ்தான் ஆரம்பத்தில் “இந்தியாவின் ஐந்து விமானங்களை வீழ்த்தினோம்” என்று அறிவித்தது. ஆனால், அவை அனைத்தும் போலி டிரோன்கள் தான் என்பதும், தாங்கள் உண்மையிலேயே ஏமாந்துவிட்டோம் என்பதும் அங்கே தெரிந்தது.

இந்த போலி விமானங்கள் – லக்ஷ்யா, பன்ஷி ஜெட் 40+, HEAT அப்யாஸ் போன்றவையாக இருக்கலாம் என பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள். இவை ரேடார் மற்றும் அகச்சிவப்பு கண்களில் உண்மையான போர் விமானங்களைப்போல் தோன்றும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest news