Sunday, December 7, 2025

பேரிழப்பு : உலக வங்கியிடம் கூடுதல் கடன் கேட்ட பாகிஸ்தான்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் பேரிழப்பை சந்தித்த பாகிஸ்தான் உலக வங்கியிடம் கூடுதல் கடன் விடுக்கக் கோரி பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச கூட்டாளிகள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News