இந்தியாவின் துல்லியமான ராணுவ தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் – சீனாவுடன் சேர்ந்து புதிய ஆபத்தான கூட்டணியில் குதித்திருக்கிறது.
சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தியது. பஹவல்பூர், முசாஃபராபாத், கோட்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயங்கரவாத தளங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில், பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
முக்கியமாக, பாகிஸ்தானின் மூன்று விமானப்படை தளங்கள் – நூர் கான், முரித் மற்றும் ஷோர்கோட் – ஆகிய பகுதிகளை இந்தியா ஏவுகணைகளால் நேரடியாக தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவமே அறிவித்தது.
இந்த பரபரப்புக்கேற்ப, சீனாவும் உடனடியாக களத்தில் இறங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு பல் முக்கோண ரீதியான ராணுவ ஆதரவுகளை வழங்கும் திட்டத்தில் சீனா இறங்கியுள்ளது. முக்கியமாக, சீனாவின் பெய்டோ செயற்கைக்கோள் அமைப்பை பாகிஸ்தான் இராணுவம் பயன்படுத்துவதற்கு சீனா அனுமதி அளித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் மூலம் இந்திய ராணுவ நடவடிக்கைகள் குறித்து நேரடி கண்காணிப்பும், தரவுகளும் பாகிஸ்தான் பெறக்கூடும். மேலும் 5G இணைப்புகளின் மூலமாக பாகிஸ்தான் மற்றும் சீன இராணுவ இடையிலான ஒருங்கிணைப்புகளை மேம்படுத்தும் திட்டம் சாத்தியமாகியுள்ளது.
இவற்றுடன் மட்டும் நின்றுவிடாமல், சீனாவின் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான J-35A மாடல்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்யும் திட்டத்தையும் சீனா உறுதி செய்துள்ளது. முதற்கட்டமாக 30 விமானங்களை பாகிஸ்தான் பெறும் வாய்ப்பு உள்ளது. இது ஆகஸ்ட் 2025 இற்குள் அமல்படுத்தப்படும்.
இதற்காக 50% தள்ளுபடி, குறைந்த வட்டி கடன் மற்றும் நீட்டிக்கப்பட்ட கட்டண திட்டம் போன்ற வசதிகளை சீனா வழங்கியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படையின் இந்தியாவிற்கு எதிரான செயல்திறனுக்கான “வெகுமதி” என்றே சீனா இது போன்ற சலுகைகளை வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தெளிவாக ஒரு விஷயத்தை காட்டுகிறது – சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவை எதிர்த்து மிக நெருக்கமான ராணுவ கூட்டணியில் இணைந்திருக்கின்றன. இந்த கூட்டணி எதிர்காலத்தில் எதை உருவாக்கப் போகிறது என்பது மிக கவனத்துடன் பார்க்க வேண்டிய விஷயம்!