Tuesday, June 24, 2025

இந்தியாவால் மிராண்ட பாகிஸ்தான்! Offer-இல் சீனா கொடுக்கும் அதிபயங்கர ஆயுதம்!

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த மாதம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பெரிய ரீதியான தாக்குதலை நடத்தி, பாகிஸ்தானின் முக்கிய ராணுவ வசதிகளை அழித்தது. அதுவும், பாகிஸ்தான் வைத்திருந்த சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள், போர் விமானங்கள் இருந்தும் இந்தியா மிக ஈஸியாக தாக்கியது. இது மட்டுமல்ல, சீனாவின் ராணுவ உபகரணங்கள் திறன் குறைவாக இருக்கலாம் என்ற கேள்விகளையும் எழுப்பியது.

இதைத்தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா புதிய முடிவெடுத்தது. அதாவது, தனது அதிநவீன ஐந்தாம் தலைமுறை J-35A ரக போர் விமானங்களை, மிகவும் குறைந்த விலையில்,அதவாது 50% விலையில் விரைவில் வழங்க ஒப்புக்கொண்டது. இது சீன சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இந்த விமானங்கள் இன்னும் சீன ராணுவத்துக்கே முறையாக வழங்கப்படாத நிலையில், சோதனை நிலையில் இருக்கும்போதே, பாகிஸ்தானுக்குப் போனது ஆச்சர்யமாக இருக்கிறது.

சிலர் இதனை, “பாகிஸ்தானை ஒரு சோதனை மையமாக பயன்படுத்துவதற்காகவே இந்த விமானங்களை சீனா கொடுக்கிறது” எனக் கூறுகிறார்கள். மேலும், சீனாவின் நெட்டிசன்கள், “இவர்கள் இன்னும் J-10C விமானங்களுக்கே பணம் செலுத்தவில்லை. அப்படி இருக்க, J-35A வாங்குறது எப்படி?” என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள்.

இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராததால் குழப்பம் தொடர்கிறது. ஆனால், இந்த விமானங்கள் இந்த ஆண்டு ஆகஸ்டில், முதல் டெலிவரி செய்யப்படும் என்ற செய்தி கூட அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ராணுவ திறனை விமர்சனத்துக்குள்ளாக்கும் இந்த சூழலில், இந்தியா எதிராக இருக்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு இவ்வாறு விமானம் கொடுப்பது, ஒரு தீர்மானமான இராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இது ஒரு இருநாட்டு மோதலுக்கு காரணமாக மாறுமா? அல்லது சோதனை மட்டமா? என்பதை நேரமே பதிலளிக்க்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news