ஆப்கானிஸ்தான் மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்: 400 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் நகரில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்தியதாக கூறப்படும் வான்வழி தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் ஏறத்தாழ 250 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் திங்கட்கிழமை (மார்ச் 16) இரவு நடைபெற்றதாக ஆப்கான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத் கூறினார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறிப்பாக அண்மைக்காலங்களில் எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக இரு தரப்புகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

தற்போது, இந்த மோதல் தொடங்கி மூன்று வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், மருத்துவமனை தாக்குதலுக்கு முன்பாகவே எல்லைப் பகுதிகளில் இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

Latest News