பாகிஸ்தானில் கராச்சியிலிருந்து லாகூர் நோக்கிப் பயணித்த பி.ஐ.ஏ. விமானம் PK-306, லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பின்புற சக்கரம் காணாமல் போயுள்ளது. ஒரு சக்கரம் இல்லாவிட்டாலும் திட்டமிட்டபடி தரையிறங்கியது என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பயணிகள் வழக்கம்போல் இறங்கினார்கள்.
விமானம் சக்கரம் இல்லாமலே கராச்சியில் இருந்து புறப்பட்டதா அல்லது பயணிக்கும்போது சக்கரம் மாயமாகிவிட்டதா என்பதை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். விமானப் பாதுகாப்பு மற்றும் லாகூர் விமான நிலையக் குழுக்கள் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.