Friday, February 21, 2025

பேக் செய்யப்பட்ட சிப்ஸ் சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?

பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் அதிகமானோர் விரும்பி சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. இது அதிக சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் இதில் இருக்கும் ஆபத்துக்கள் பலருக்கும் தெரிவதில்லை.

பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸில் அதிக அளவு ஆரோக்கியமற்ற எண்ணெய்கள், அதிகப்படியான உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை உடல் நலப்பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக டீனேஜர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

பேக் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸை அடிக்கடி உட்கொள்வது எடை அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமற்ற சிப்ஸுக்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நல்லது.

Latest news