Wednesday, March 12, 2025

13 பாலியல் வன்கொடுமைகள் : பாஜக குழு தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறை

ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத் தலைவராக அறியப்பட்டவர் பாலேஷ் தன்கர். ஆஸ்திரேலியாவின் இந்து மத ஆணையத்தின் செய்தி தொடர்பாளராக செயல்பட்ட பாலேஷ் தன்கர், பாஜக கட்சியின் அந்நாட்டு குழு ஒன்றையும் உருவாக்கி நிர்வகித்து வந்தார்.

இவர் வேலை தேடி வந்த பெண்களை, சிட்னியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று போதை மருந்து கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு சிட்னியிலுள்ள அவரது வியாபார மையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது மயக்க மருந்துகள் மற்றும் கடிகாரத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட கேமரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர் 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அந்நாட்டு நீதிமன்றம் பாலேஷ் தன்கருக்கு 40 வருட சிறை தண்டனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. 2053 வரை 30 ஆண்டுகளுக்கு அவருக்கு பரோல் வழங்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

Latest news