Sunday, December 22, 2024

வளிமண்டலம் இல்லாத பூமி எப்படி இருக்கும்!

தற்போது மனிதர்களின் செயற்பாடுகளால் அழிந்து வரும் இயற்கையால், மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகள், விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிர்களும் கூட பாதிப்படையவே செய்கின்றன.

மனிதர்களின் இந்த இயற்க்கைக்கு எதிரான மோசமான செயல்பாடுகள் அவ்வப்போது, இணையத்தில் பெரிய விவாதத்தை உருவாக்கினாலும், பெரிய மாற்றங்கள் எதுவும் இன்று வரை நடந்ததில்லை.

பருவநிலையில் இயற்கையாகவே மாற்றங்கள் இருந்து வந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலை முன்னெப்போதுமில்லாத வகையில் வேகமாக உயர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பூமியின் சராசரி வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ்.

பூமியின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பது மிகவும் அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று நீண்டகாலமாக கூறப்பட்டு வரும் நிலையில்,

தற்போது நிலவி வரும் சூழ்நிலை தொடரும் பட்சத்தில், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள்ளேயே வெப்பநிலை 3-5 செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்று உலக

வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

இந்த சூழலில் இயற்கை முற்றிலும் அழிந்து போன இந்த உலகின் வளிமண்டலம் எவ்வாறு இருக்கும் என வெளியான ஒரு கலைஞரின் வரைபடம் தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.

மரங்களும் நீர்நிலைகளும் மலைகளும் என வண்ண மயமான அழகிய உலகத்தை மனிதனின் சுயநலத்திற்க்காக அழிப்பது இந்த உலகிற்கு மனிதன் செய்ய கூடிய துரோகம் ஆகும்.

இயற்கையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த இது போன்ற கலைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது.

Latest news