தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. மேலும், இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். நேற்று வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் ‘இட்லி கடை’ திரைப்படம் எப்போது ஓ.டி.டி.யில் வெளியாகும் என ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டனர்.
இந்த படம் ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ‘இட்லி கடை’ படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் தளம் பெற்றுள்ளதாகவும், நவம்பர் மாதம் இப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இது எந்த அளவிற்கு உண்மையானது என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.