ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கருப்பு திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 23 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சாட்டிலைட் உரிமத்தை ஜீ5 நிறுவனமும் கைபற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
