அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரைத்துறையினருக்கு வழங்கப்பட்டும் மிகப்பெரிய விருது மற்றும் அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறும்.
இதுவரை ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்வை அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சி சேனல் நேரடியாக ஒளிபரப்பி வந்த நிலையில் வருகிற 2029 முதல் 2033 வரை ஆஸ்கர் நிகழ்வுகளை ஒளிபரப்பும் உரிமத்தை யூடியூப் தளத்திற்கு வழங்கவுள்ளதாக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி, வருகிற 2029 முதல் 2033 வரை ஆஸ்கர் நிகழ்வுகளை ஒளிபரப்பும் உரிமத்தை யூடியூப் தளத்திற்கு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகப்படியான ரசிகர்களைச் சென்றடையவும் கலாசார நிகழ்வுகளை விரிவுப்படுத்தவும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
