Monday, December 22, 2025

ஒரே காரில் பயணித்த ஓ.பி.எஸ், செங்கோட்டையன் – வைரலாகும் புகைப்படம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நடைபெற்று வந்தது.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியிருந்தார். செங்கோட்டையனின் கருத்துக்கு சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதையடுத்து செங்கோட்டையனை கட்சிப் பதவி​களில் இருந்து நீக்கி பழனி​சாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு ஓ.பன்னீர்செல்வத்துடன் ஒரே காரில் செங்கோட்டையன் பயணம் செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களுடன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அதே காரில் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Related News

Latest News