தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழு வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில் கூட்டணி குறித்து இன்று ஓ.பி.எஸ் அறிவிக்க உள்ளதாக நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தீர்மானம் நிறைவேற்றபட்டதாகக் கூறினார். மேலும், இனி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம் பெறாது என்று கூறினார்.