காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய பகல்ஹாம் தாக்குதலுக்கு, “Operation Sindoor’ மூலம் இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதையடுத்து உலகளவில் அதிகம் பேசப்படும் விஷயமாக, “Operation Sindoor’ மாறியிருக்கிறது.
இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகள் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்தநிலையில் இந்தியா நடத்திய “Operation Sindoor’க்கு பிறகு, பாகிஸ்தான் மக்கள் கூகுளில் அதிகம் தேடிய விஷயங்கள் குறித்து தெரிய வந்துள்ளது.
அதன்படி பாகிஸ்தான் மக்கள், ‘ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன?, ஆங்கிலத்தில் சிந்தூர் என்னும் வார்த்தை எதை குறிக்கிறது?, இந்தியா ஏவுகணை தாக்குதல், இந்தியா பாகிஸ்தானை நோக்கி ஏவுகணை ஏவியது, வெள்ளைக்கொடி என்றால் என்ன அர்த்தம்?, இந்தியா போரை அறிவிக்கிறதா?
போன்றவற்றை அதிகம் தேடி இருக்கின்றனர். குறிப்பாக ”இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்கிறதா?” என்ற கேள்விக்கான விடையை பாகிஸ்தானியர்கள், கூகுளில் அதிகம் தேடி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.