Thursday, December 26, 2024

இங்கிலாந்தில் அடுத்தடுத்து நிகழப் போகும் அதிரடி மாற்றங்கள்

இங்கிலாந்தை நீண்ட காலமாக ஆட்சி செய்து வந்த அரசியான இரண்டாம் எலிசபெத் தனது 96ஆம் வயதில், உடல்நலக்குறைவால் காலமானார்.

இப்போதைய தலைமுறையினர் கண்டிருக்கும் ஒரே அரசியாக எலிசபெத் இருக்கும் நிலையில், எலிசபெத் மறைவினால்

இங்கிலாந்தில் நிகழப்போகும் மாற்றங்களை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம். எலிசபெத் இறக்கும் பட்சத்தில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய Operation London Bridge தொடர்பான ஆவணத்தை, Guardian மற்றும் Politico இதழ்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

எலிசபெத் இறக்கும் நாள் D Day எனவும் D+1, D +2 என அடுத்த 10 நாட்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் மிக துல்லியமாக இடம்பெற்றுள்ளது.

1960களில் இருந்து இது போல ஒரு சவாலான சூழ்நிலையை சந்திக்க இங்கிலாந்து தயார்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த 10 நாட்களுக்கு இங்கிலாந்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள், நாடக அரங்கேற்றங்கள், விளையாட்டு போட்டிகள் ஆகியவை தடை செய்யப்படும். எலிசபெத்தின் இறுதி சடங்குகள் வரலாறு காணாத அளவிற்கு பிரம்மாண்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலிசபெத்துக்கு மரியாதை செய்ய உலகெங்கும் இருந்து வருகை புரிய உள்ள முக்கிய தலைவர்கள் மற்றும் அலைகடலென அஞ்சலி செலுத்தவுள்ள இங்கிலாந்து மக்களுக்காக நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, இங்கிலாந்தில் இளவரசர் சார்லஸ் புதிய மன்னராக பதவியேற்க உள்ளார். 66 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் ஒரு மன்னர் பொறுப்பேற்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

புதிதாக பதவியேற்கும் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் அச்சிடப்படும். நாடு முழுவதும் பல்வேறு துக்க அனுசரிப்பு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டேயிருக்கும். மேலும், இங்கிலாந்தின் தேசிய கீதத்தில் இடம்பெறும் “God Save the Queen” என்ற வரி இனிமேல் “God Save the King” என மாற்றம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news